இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் – சாதிப்பாங்களா ?

INDvsENG

இந்திய அணி தற்போது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அடுத்து வரும் இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு ஒரு முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்கும் இந்த மிகப்பெரிய தொடரானது இந்திய அணிக்கு சவாலானதாகவே அமைய வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் இந்திய அணிக்கு ஓய்வு உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றுள்ளதால் இந்த இங்கிலாந்து தொடருக்காக சரியான முறையில் தயாராகும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது.

- Advertisement -

அதனால் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார். அதன்படி அதில் இரண்டு பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யும்படியும், இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணி சிறப்பாக தயாராக ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளதாக தெரிகிறது.

IND

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக பயிற்சி போட்டியில் இந்திய அணி பங்கேற்காததே இந்த இறுதி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது வீரர்களுக்கு கட்டாயம் பயிற்சி போட்டி தேவை என்பதனால் பிசிசிஐ தரப்பிலிருந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Rohith

இந்நிலையில் இந்த கோரிக்கையினை ஏற்ற இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணிக்காக பயிற்சி போட்டியினை ஏற்பாடு செய்து தர முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement