சென்னை அணியில் இருந்து விலகி நாடு திரும்பம் நட்சத்திர வீரர் – மீண்டும் சிக்கலில் சி.எஸ்.கே அணி

CSK-1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் ஐபில் தொடரில் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடித்து வருகிறது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 போட்டிகளில் மோசமாக தோற்று 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதற்கு அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

jadeja 1

ஆனால், அணியின் பயிற்சியளர் ஸ்டீபன் பிளமிங் அணியில் உள்ள வயதான வீரர்கள் அதிகம் இருப்பதால் தான் தொடர் தோல்விகளுக்கு காரணம் என மறைமுகமாக கூறியிருந்தார். மேலும், வயதான வீரர்களை வைத்து இது போன்ற மைதானங்களில் சரியாக விளையாட முடியவில்லது என்றும் கூறி இருந்தார். சமீபத்தில் நடந்த போட்டியில் கூட கடைசி நேரத்தில் 20வது ஓவரில் பிராவோ காயம் காரணமாக பந்து வீச முடியாமல் வெளியேறினார்.

அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா வந்து இருபதாவது ஓவரை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா வந்து இருபதாவது ஓவரை வீசினார். இந்நிலையில் மூத்த வீரர் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக இந்த வருடம் வெளியேறுவதாக அறிவித்துள்ளார் .

bravo

ஏனெனில் அவருக்கு ஏற்பட்ட காயம் பெரிதாகியுள்ளது. மேலும் காயத்துடன் தான் இந்த காயத்துடன் தான் கடைசி 5 போட்டிகளில் விளையாடினார். இருந்தாலும் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை. சென்னை ரசிகர்களுக்கு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டு விட்டு தொடரில் இருந்து வெளியேறி நாடு திரும்பினார் டிவைன் பிராவோ.

- Advertisement -

Bravo

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி குட்டிக்கரணம் அடித்தாலும் இந்தத்தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது என்பது உறுதியாகி விட்டது. இனி வரும் போட்டிகளில் ஆக்ரோசமாக இளம் வீரர்களை வைத்து சென்னை அணி ஆடி தனது இழந்த மாண்பை மீட்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.