
ஐ.பி.எல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சென்னை அணி சாதனை படைத்துள்ளது. சென்னை அணியின் இந்த வெற்றிக்கு பல்வேறு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க கட்சியின் துணை பொது செயலாளர் துரைமுருகன் சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துளளார்.
கோப்பையை வென்ற கையோடு, வெற்றியை கொண்டாட சென்னை அணி வீரர்கள் நேற்று மாலை சென்னைக்கு வந்தனர். விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தோனி மற்றும் சக வீரர்களும் பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சமீபத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனியை சந்தித்து பாராட்டுளை தெரிவித்த தி.மு.க கட்சியின் துணை பொது செயலாளர் துரைமுருகன், சென்னை அணியும் ஜெர்ஸி ஒன்றில் தோனியின் ஆட்டோகிராப் ஒன்றையும் வாங்கி கொண்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.