PAK vs RSA : இவரைத்தவிர வேறு யாரும் சிறப்பாக பந்துவீசவில்லை – டூப்ளிஸிஸ் விளாசல்

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Faf
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

azam

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Tahir

நேற்று போட்டி முடிந்து பேட்டி அளித்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிசிஸ் கூறியதாவது : எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் துவக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். மேலும் பார்ட்னர்ஷிப் அமைக்கவும் தவறி வருகின்றனர். இந்த தொடர் ஆரம்பம் முழுவதுமே எங்களது ஆட்டம் மோசமாகவே உள்ளது. மேலும் பந்துவீச்சு இம்ரான் தாஹிர் மட்டுமே சிறப்பாக தொடர்ந்து பந்து வீசுகிறார் அவருக்கு ஒருவரும் கை கொடுக்கவில்லை. அவரை தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சற்று சொதப்பலாக பந்துவீசி வருகின்றனர். இந்த தொடர் எங்களுக்கு மிக மோசமாக அமைந்து விட்டது போட்டியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தும் நாங்கள் தொடர்ந்து தோல்வியை அடைவது காரணம் புரியவில்லை என்று டூபிளிஸ்சிஸ் கூறினார்.

Advertisement