நாங்கள் நினைத்தது தலைகீழாக நடந்துவிட்டது. அதுவே இந்த தோல்விக்கு காரணம் – டூபிளிஸ்சிஸ் புலம்பல்

Faf
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ind

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நான்காம் நாளான இன்று மேலும் ஒரு ரன் சேர்த்து 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென்ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறியதாவது : இந்த தொடர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த தொடரின் ஆரம்பத்தில் நல்ல அறிகுறிகள் தென்பட்டாலும் அதன் பிறகு ஆட்டம் தடம் மாறிப் போய் விட்டது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அதிக தவறுகளை நாங்கள் செய்தோம். அதற்காக இந்திய அணிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். அவர்கள் இரக்கம் இன்றி எங்கள் அணியை மிரட்டி விட்டார்கள்.

Umesh 3

சுழற்பந்து, வேகப்பந்து, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களைவிட சிறப்பாக செயல்பட்டது. 2015 ஆம் ஆண்டு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்சுகள் இருந்தன. அதை மனதில் வைத்து நாங்கள் செயல்பட்டால் தற்போது எல்லாம் தலைகீழாக நடந்து விட்டன. இம்முறை வேகப்பந்து வீச்சில் இந்திய அணி கலக்கி விட்டது என்று இந்திய அணியை பாராட்டி டூபிளெஸ்ஸிஸ் பேசி இந்த டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து புலம்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement