KKR vs CSK : உத்தப்பாவின் விக்கெட்டினை அட்டகாசமான கேட்ச் பிடித்து அசத்திய டுப்ளிஸிஸ் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக்

Duplissis
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின.

karthik

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா வாரரான ராபின் உத்தப்பா தான் சந்தித்த முதல் பந்தில் இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் டுப்ளிஸிஸ் இடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த கேட்சை பவுண்டரி லைனில் இருந்து ஓடிவந்த டுப்ளிஸிஸ் அபாரமாக ஓடி வந்து அட்டகாசமாக பிடித்தார். இதோ அந்த வீடியோ :

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் சென்னை அணி இதுவரை 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்துள்ளது. சென்னை அணி வெற்றி பெற இன்னும் 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை. ரெய்னா மற்றும் ஜடேஜா விளையாடி வருகின்றனர்.

Advertisement