இந்திய அணியில் இவரே உண்மையான போராளி. அதாலே தோனியை தாண்டி இவர் பெரிதாக வளர்ந்து நிற்கிறார் – முன்னாள் பயிற்சியாளர் கருத்து

Fletcher
- Advertisement -

இங்கிலாந்து அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர் டங்கன் பிளட்சர். இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ஆம் 2011 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்து விலகியதன் பின்னர் 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்தார். கேரி கிறிஸ்டன் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியதால் அதன்பின்னர் அவரை போன்று ஒரு பயிற்சியாளரை இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக தேடியது.

Duncan Fletcher

அதற்கு பதிலாக கிடைத்தவர் தான் இந்த டங்கன் பிளட்சர். இவரது பயிற்சி காலகட்டத்தில் இந்திய அணி 8 தொடர்களை வென்று அசத்தியது. மேலும் இவரது பயிற்சி காலத்தில் தான் இந்திய அணி கேப்டன் விராட்கோலி இளம் வீரராக இருந்து ஒரு முதிர்ச்சியான வீரராக வேகமாக கிடுகிடுவென வளர்ந்தார்.

- Advertisement -

அப்போது இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தார். ஆனால் அதைத் தாண்டி கோலி பெரிய நட்சத்திரமாக உருவெடுத்த நேரம் அந்த நான்கு ஆண்டுகள் தான். இந்நிலையில் தற்போது விராட்கோலி குறித்து ஒரு கருத்து அவர் தெரிவித்துள்ள (முன்னாள் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் தெரிவித்துள்ளார்) கருத்தினை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Duncan Fletcher 1

அதில் அவர் குறிப்பிட்டதாவது : அந்த பையனை (கோலி) பாருங்கள். அவர் உண்மையாகவே போர் குணம் கொண்டவர். அவரது போராட்ட குணம் ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள வீரர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருப்பார் என்று கூறினார்.

- Advertisement -

2017 ஆம் ஆண்டு தோனியிடம் இருந்து கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றார் அதன்பிறகு இன்னும் அவரே நீடிக்கிறார் என்று கூறியதாக நாசர் ஹூசைன் கூறினார். மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோலி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Duncan Fletcher 2

கோலி டெஸ்ட் போட்டிகளில் 7240 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 11867 ரன்களையும் அவர் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை அவர் புதிதாக படைத்தது வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement