இந்தியாவில் துலீப் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்குகிறது. பொதுவாக துலீப் கோப்பை மண்டலங்கள் வாரியாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை 6 அணிகளுக்கு பதிலாக இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் மட்டுமே விளையாட உள்ளன. அதனால் இம்முறை நாக் அவுட்டுக்கு பதிலாக ரவுண்ட் ராபின் முறையில் இத்தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். அந்த வகையில் நடைபெறும் இத்தொடரில் விளையாடும் 4 அணிகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதில் ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் கேப்டனாக தேர்வாகியுள்ளனர். அந்த அணிகள் பின்வருமாறு:
துலீப் கோப்பை:
அணி ஏ – சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், மயங் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், திலக் வர்மா, சிவம் துபே, டானுஷ் கோடின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலில் அஹ்மத், ஆவேஷ் கான், வித்வாத் காவேரப்பா, குமார் குஷக்ரா ஷஸ்வட் ராவத்
அணி பி – அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), ரிஷப் பண்ட், யசஸ்வி ஜெய்ஸ்வால், சர்பாராஸ் கான், முஷீர் கான், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமத் சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, நாராயண் ஜெகதீசன்
அணி சி – ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிடார்,சூர்யகுமார் யாதவ், அபிஷேக் போரேல், பாபர் இந்திரஜித், ரித்திக் ஷாக்கீன், மாணவ் சுதர், உம்ரான் மாலிக், வியஷக் விஜய்குமார், அன்சல் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங் மார்கண்டே, ஆர்யன் ஜுயல், சந்தீப் வாரியர்
அணி டி – ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைட், யாஷ் துபே, தேவ்தூத் படிக்கல், இஷான் கிஷான், ரிக்கி பூய், சரண்ஸ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாக்ரே, ஹர்ஷிட் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் செங்குப்தா, கேஎஸ் பரத், சௌரப் குமார்
அட்டவணை:
செப்டம்பர் 8 – 10: அணி ஏ – அணி பி, பெங்களூரு
செப்டம்பர் 8 – 10, அணி சி – அணி டி, அனந்தபூர்
செப்டம்பர் 12 – 15: அணி ஏ – அணி டி, அனந்தபூர்
செப்டம்பர் 12 – 15: அணி பி – அணி சி, அனந்தபூர்
செப்டம்பர் 19 – 22: அணி பி – அணி டி, அனந்தபூர்
செப்டம்பர் 19 – 22: அணி ஏ – அணி சி, அனந்தபூர்
இதையும் படிங்க: கங்குலிக்கு இடமில்லை.. தனது ஆல் டைம் இடது கையாளர்கள் கனவு டெஸ்ட், ஒருநாள் அணியை வெளியிட்ட வாசிம் ஜாபர்
இந்த போட்டிகள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு துவங்கும். இதை ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி மற்றும் அலைபேசியில் ஜியோ சினிமா சேனலில் வாயிலாக நேரலையாக பார்க்கலாம்.



