- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4, 4, 4, 4, 4.. 33 பந்தில் 61.. சுப்மன் கில் அணியை தெறிக்க விட்ட சர்பாரஸ் – பண்ட்.. இந்தியா பி மிரட்டல்

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ரவுண்டு இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதி வரும் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி போராடி 321 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 94-7 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு இளம் வீரர் முஷீர் கான் அபாரமாக விளையாடி சதமடித்து 16 பவுண்டரி 5 சிக்சருடன் 181 ரன்கள் விளாசி காப்பாற்றினார். அவருக்கு நவ்தீப் ஷைனி 56 ரன்கள் குவித்து கை கொடுத்தார்.

- Advertisement -

வெளுத்த சர்பார்ஸ்:

இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 25, மயங் அகர்வால் 36, ரியன் பராக் 30, கே.எல் ராகுல் 37, சிவம் துபே 20 என எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.

மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார், நவ்திப் சைனி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 90 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா பி அணிக்கு ஜெய்ஸ்வால் 9, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 4, முசீர் கான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 22-3 என ஆரம்பத்திலேயே தடுமாறி அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.

- Advertisement -

மிரட்டிய ரிஷப் பண்ட்:

அதில் ஆகாஷ் தீப் வீசிய 10வது ஓவரில் 4, 4, 4, 4, 4 என முதல் பந்தை தவிர்த்து கடைசி 5 பந்துகளில் சர்பராஸ் கான் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு 46 (36) ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய வாங்கிய ரிஷப் பண்ட் 34 பந்துகளில் அரை சதமடித்து 9 பவுண்டரி 2 சிக்சருடன் 61 (47) ரன்கள் விளாசி போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் நெகிழ்ந்து போன கே.எல் ராகுல் – நடந்தது என்ன?

அவர்களது ஆட்டத்தை பார்த்து இந்தியா ஏ அணி கேப்டன் சுப்மன் கில் திகைத்துப் போய் நின்றார். இறுதியில் அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 19 ரன்களில் அவுட்டானதுடன் முடிவுக்கு வந்த மூன்றாவது நாளில் இந்தியா அணி 150-6 ரன்கள் குவித்துள்ளது. தற்போது 240 ரன்கள் முன்னிலையுடன் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ள அந்த அணிக்கு களத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடன் உள்ளார்.

- Advertisement -