நான் 3 ஆம் இடத்தில் இறங்க காரணம் கோலி அல்ல. இவர்தான் – ஷிவம் துபே பேட்டி

Dube

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது t20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடிய 170 ரன்களை அடித்தாலும் இரண்டாவதாக கேட்சிகள் மற்றும் பீல்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரரான ஷிவம் துபே வித்தியாசமாக மூன்றாம் நிலை எதிராக கோலிக்கு பதிலாக களமிறங்கினார் இந்த விடயம் மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடுவதற்கே என்று கோலி ஏற்கனவே பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் இதுகுறித்து தற்போது ஷிவம் துபே அளித்த பேட்டியில் : என்னை மூன்றாம் இடத்தில் கோலி இறக்கி விட்டாலும் அதற்கு முன்னரே அந்த இடத்தில் என்னை விளையாட வைப்பதற்காக ரோஹித் ஆலோசனை வழங்கினார் என்றும் மேலும் ரோஹித் 3வது வீரராக களம் இறங்கிய போது என்னால் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் என்னை ரோஹித் ஊக்கப்படுத்தினார் என்றும் துபே கூறினார்.

dube

மேலும் களத்தில் இருக்கும்போது எனக்கு திறமை இருக்கிறது என்பதை நம்ப வைத்து என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தார் அவர் அளித்த ஊக்கம் காரணமாக என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று ரோஹித் குறித்து துபே பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -