எவ்வளவு பெரிய மைதானமாக இருந்தாலும் அதைவிட பெரிய சிக்ஸர் என்னால் அடிக்கமுடியும் – இந்திய வீரர் சவால்

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது t20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடிய 170 ரன்களை அடித்தாலும் இரண்டாவதாக கேட்சிகள் மற்றும் பீல்டிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

wi 1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரரான ஷிவம் துபே வித்தியாசமாக மூன்றாம் நிலை எதிராக கோலிக்கு பதிலாக களமிறங்கினார் இந்த விடயம் மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடுவதற்கே என்று கோலி ஏற்கனவே பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து ஷிவம் துபே அளித்த பேட்டியில் : மூன்றாவது வீரராக களம் இறங்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப் பெரியது. விளையாட வந்ததும் எனக்கு கொஞ்சம் நெருக்கடி இருந்தது. ஆனால் ரோகித் சர்மா என்னிடம் வந்து உன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடு என்று கூறினார்.

Dube 1

அவர் கூறிய வார்த்தையே என நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாட வைத்தது. ஒரு சிக்சர் அடித்த பின்னர் நான் உத்வேகத்தைப் பெற்று மேலும் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை இந்த போட்டியில் ஆட முடியும் என்று நினைத்தேன். அது மட்டுமின்றி உலகில் உள்ள எந்த ஒரு மைதானத்திலும் என்னால் சிக்ஸ் அடிக்க முடியும் அதுவே என்னுடைய திறமை அந்த திறமையின் மீது நான் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

dube

மேலும் திருவனந்தபுரம் மைதானம் கொஞ்சம் பெரிதாக இருந்தது என்று நினைக்கிறேன். இருந்தாலும் எந்த ஒரு மைதானத்தில் சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளதால் அதை என்னுடைய பலமாகக் கொண்டு இந்த போட்டியில் சில சிக்சர்களை விளாசினார். மேலும் இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய அதிரடி நான் தொடர விரும்புகிறேன். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை இழந்தாலும் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்தோடு விளையாடுவோம் என்று ஷிவம் துபே கூறினார்.

Advertisement