கோலியின் இடமாற்றம். பொளந்து கட்டிய துபே. இவரா இப்படி – விவரம் இதோ

Dube 1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

ind vs wi

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்டி தற்போது திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியின் துவக்க வீரர் ராகுல் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க மூன்றாவது வீரராக வழக்கமாக களமிறங்கும் விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஷிவம் டுபே களத்திற்குள் வந்தார். இதனால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.வந்தது முதல் அதிரடியாக ஆடிய துவே அசத்தினார்.

Dube

சரமாரியாக அடித்து நொறுக்கிய துபே 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்தது டி20 போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதிலும் குறிப்பாக பொல்லார்ட் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து அசர வைத்தார். தற்போது இந்திய அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் துபே ஆடிய விதம் ரசிகர்களை நிச்சயம் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -