பயிற்சியின் போது சுழற்பந்து வீச்சாளராக மாறி பேட்ஸ்மேன்களுக்கு பிராக்டீஸ் கொடுத்த – ராகுல் டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் இன்று க்ரீன் பார்க் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தொடரில் முதன்முறையாக பயிற்சியாளர் பதவியேற்ற ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய அணியானது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து அவரது தலைமையில் தற்போது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் செய்த இன்றைய பயிற்சியில் பயிற்சியாளர் டிராவிட் சிறிது நேரம் பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சாளராக மாறி பயிற்சியின்போது பந்துவீசி வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ராகுல் டிராவிட் பந்து வீசிய இந்த வீடியோ தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பயிற்சியாளராக முழு மனதுடன் டிராவிட் செயல்பட்டு வருவதை இந்த வீடியோ வெளிக்காட்டுவதாக ரசிகர்கள் டிராவிடை புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement