வீரர்களுக்கு ஏற்படும் கொடுமை என்னிடம் நடக்காது. நான் கோச்சா இருந்தா இப்படித்தான் இருப்பேன் – டிராவிட் ஓபன்டாக்

Rahul
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவானான ராகுல் டிராவிட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்து திறமையான இளம் வீரர்களை பயிற்றுவித்து இந்திய அணிக்கு அனுப்பும் பெரிய வேலையை செய்தா.ர் அவரது தலைமையின் கீழ் பயிற்சி பெற்ற பல இந்திய இளம் வீரர்கள் தற்போது தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக இருக்கும் டிராவிட் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் இளம் வீரர்களை கண்காணித்து அவர்களை உருவாக்கி மிகப்பெரிய மாவீரராக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ராகுல் டிராவிட் தனியார் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் வீரர்களின் தேர்வு குறித்து கூறுகையில் :

- Advertisement -

நான் என்னுடைய தலைமையில் ஒரு அணியை சுற்றுப்பயணத்திற்கு அழைத்து சென்றால் அணியில் இடம்பெற்று இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து தான் திரும்ப அழைத்து வருவேன். எந்த ஒரு வீரரும் விளையாடாமல் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு திரும்பி வருவது எனக்கு பிடிக்காது. ஒரு வீரர் அணியில் தேர்வாகி அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திரும்பி வருவது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு நன்றாக தெரியும், அதே போல நானும் இருந்திருக்கிறேன். உள்நாட்டில் 700-800 ரன்களை குவித்து விட்டு வெளிநாட்டில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்களின் திறமையை எப்படி வெளிப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

Dravid

மேலும் தொடர்ந்து பேசிய டிராவிட் : ஒருமுறை நீங்கள் சிறப்பாக ரன் குவித்து தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்து எடுத்து விட்டால் அடுத்த முறையும் அதே போன்று சிறப்பாக ரன்களை குவிக்க வேண்டும் ஆனால் அது எளிதான காரியம் அல்ல. இருப்பினும் தேர்வாளர்களின் பார்வை உங்கள் மீது பட்டு நீங்கள் அணிக்கு தேர்வானால் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். ஏனெனில் பிறகு மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதி கிடையாது.

rahul-dravid

என்னுடன் 15 பேரை நான் ஒரு சுற்றுப்பயணத்திற்கு அழைத்து சென்றால் சுழற்சிமுறையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவேன். இதேபோன்றுதான் அண்டர் 19 போட்டிகளில் கூட 5-6 மாற்றங்களை செய்வேன் என்று டிராவிட் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் வீரர்கள் சரியான கிரிக்கெட் மைதானத்திலும், மேட்களிலும் பயிற்சி செய்ய வேண்டும் ஏனோ தானோ என்று விளையாடக்கூடாது என்றும் வீரர்களுக்கு சரியான பயிற்சியாளரும் அமைய வேண்டும் எனவும் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement