ப்ரித்வி ஷா மட்டுமல்ல. இவங்க 2 பேருக்கும் இந்த இலங்கை தொடர் ரொம்ப முக்கியம் – டிராவிட் பேட்டி

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது இன்னும் சில நாட்களில் இலங்கையில் துவங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அங்கு சென்றுள்ளதால் இந்தியாவில் இருக்கும் இளம் வீரர்களைக் கொண்ட 20 பேர் அடங்கிய புதிய அணி ஒன்றினை பிசிசிஐ அறிவித்து அவர்களே இந்த தொடரில் விளையாடுவார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

dravid

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் முன்னின்று வழி நடத்த உள்ளார். மேலும் 19 வயதுக்குட்பட்டோர் அணியை ஏற்கனவே வழிநடத்திய டிராவிட் இந்த இந்திய அணியும் சிறப்பாக வழிநடத்துவார் என்று அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இலங்கை செல்வதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் தவான் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதில் இலங்கை தொடருக்கான பல முக்கிய கேள்விகளுக்கு ராகுல் டிராவிட் தனது வெளிப்படையான பதில்களை அளித்திருந்தார். குறிப்பாக இளம் வீரர்களின் வாய்ப்பு குறித்து பேசிய டிராவிட் : இந்த குறுகிய தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது சாத்தியமில்லாதது தான் எனவே தொடரை வெல்வதற்கான சிறந்த அணி எதுவோ அதனை நாங்கள் தேர்வு செய்து விளையாட வைப்போம். ஆனாலும் ஷிகர் தவான் போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள இந்த தொடர் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும் என டிராவிட் கூறினார்.

Shaw

அதன் பிறகு ப்ரித்வி ஷாவின் இடம் இந்த தொடரில் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட் கூறுகையில் : ப்ரித்வி ஷா மட்டுமல்ல அவர்களை அவரைத் தாண்டி நிறைய வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியமான தொடர்தான். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், படிக்கல் போன்றோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருப்பார்கள். அதனால் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி பேசாமல் இளம் வீரர்கள் அனைவருக்கும் இந்த தொடர் முக்கியமான தொடர் என்று டிராவிட் குறிப்பிட்டு பேசினார்.

அதோடு இந்த தொடரில் பிரஷர் இன்றி இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் தேர்வாளர்களால் கவனிக்க படுவார்கள் என்றும் விரைவில் அவர்கள் முதன்மை இந்திய அணிக்கு தேர்வாகவும் இந்த தொடர் ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்று டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement