நான் பார்த்து பயப்படும் இன்றைய தலைமுறை பந்துவீச்சாளர்கள் இந்த 2 பேர் தான் – டிராவிட் ஓபன் டாக்

Dravid
Dravid
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் ஜென்டில்மேன்களில் ஒருவர் இந்திய அணியை சேர்ந்த ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட்டின் பேட்டிங் டெக்னிக்கை கொண்ட ஒரு வீரர். ஆப் டிரைவ், ஸ்கொயர் கட், லேட் கட், புல் ஷாட், பிளிக் ஷாட், ஸ்ட்ரைட் டிரைவ் மற்றும் ஸ்வீப் ஷாட் என பேட்டிங்கின் அனைத்து விதமான டெக்னிக்கும் இவருக்கு அத்துப்படி என்றே கூறலாம்.

dravid

- Advertisement -

பல போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை நம்பிக்கை கொடுத்து காப்பாற்றியவர் ராகுல் டிராவிட். இதனால் அவருக்கு இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்ற பெயரும் உண்டு. அனைத்து வெளிநாடுகளிலும் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர். ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் ஏ , அண்டர் 19 போன்ற அணிகள் மூலம் பயிற்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அப்படிப்பட்ட திறமையான டிராவிட்டிடம் இன்றைய மாடர்ன் டே பந்துவீச்சாளர்களில் உங்களுக்கு கடும் நெருக்கடி யார் கொடுப்பார்கள் என்று கேள்வி ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட் கூறியதாவது : எனக்கு இன்றைய காலகட்ட பந்துவீச்சாளர்களில் இருவரின் பந்துவீச்சினை எதிர்கொள்வது மிகவும் சிரமம் என்று நினைக்கிறன். ஒருவர் தென் ஆப்பிரிக்கா பவுலர் ரபாடா. அவரது துல்லியமும் வேகமும் நிச்சயம் நான் பேட்டிங் செய்தால் என்னை அச்சுறுத்தும்.

Rabada

bhuvi 2

அதே போன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் நான் விளையாடினாலும் சிரமப்படுவேன் என்று நினைக்கிறேன் ஏனெனில் அவரது ஸ்விங் பந்து வீச்சை கணிப்பது சற்று சிரமம் என்று அவர்கள் இருவரையும் குறிப்பிட்டுச் சொன்னார் டிராவிட்.

Advertisement