குல்தீப் யாதவை இந்திய அணி ஓரங்கட்ட இவங்க 4 பேர் தான் காரணம் – சரியான காரணத்தை சொன்ன டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரை நடத்த முடியாத சூழ்நிலையில் இந்த தொடரானது ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்ததாக கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது இந்திய அணி ஜூன் 18-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவது சற்று ஆறுதலான விடயமாக அமைந்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

மேலும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தொடரில் குல்தீப் யாதவ் பெயர் புறக்கணிக்கப்பட்டதை பலரும் ஆமோதித்து வருகின்றனர். மூன்று விதமான இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது இந்த நீக்கம் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் குல்தீப் யாதவ் நீக்கம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்திய அணி தற்போது நல்ல நிலையில் உள்ளது. அவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சரி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் பலத்துடன் இருக்கின்றனர்.

kuldeep 1

தற்போதுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணியில் குல்தீப் யாதவை எடுத்து இருக்கலாம் ஆனால் ஜடேஜா, அக்சர் பட்டேல், சுந்தர், அஸ்வின் போன்றோர் சிறப்பாக செயல்படுவதால் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. அஸ்வின் ஜடேஜாவை போலவே வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரும் நன்கு பேட்டிங் தெரிந்தவர்கள்.

sundar 2

இவர்கள் அனைவருமே பேட்டிங் சிறப்பாக ஆடுவதால் அணியில் டெப்த் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே ஆடும் லெவனில் பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு தருகின்றனர். இதனால் தான் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக எனக்கு தோன்றுகிறது டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement