வரலாற்று சிறப்புமிக்க கொல்கத்தா வெற்றிக்கு நானும் லக்ஷ்மனனும் மட்டுமே காரணம் இல்லை – டிராவிட் ஓபன் டாக்

Dravid
Dravid

கடந்த 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டி வரலாற்று சிறப்புமிக்க போட்டி ஆகும். இதில் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இந்திய அணிக்காக கடுமையாக போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தனர். இந்த போட்டியில் ராகுல் டிராவிட் 180 ரன்களும் விபிஎஸ் லட்சுமணன் 281 ரன்கள் விளாசி இருந்தனர் .

dravid

இந்திய அணி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்தது அப்படி ஒரு நிலைமையை மாற்றி இந்தியாவை வெற்றியும் பெற வைத்தனர். இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணம் நாங்கள் இல்லை ரசிகர்கள்தான் என்று பேட்டி கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட். இதுகுறித்து அவர் கூறுகையில்..

கடைசியாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் 160 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. தேனீர் இடைவேளைக்கு பின்னர் நாங்கள் கடுமையாக போராடினோம். அதே நேரத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எங்களை மிகவும் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினார்கள். ரசிகர்கள் கொடுத்த ஆதரவு நம்ப முடியாத வகையில் இருந்தது.

Dravid 1

ஈடன் கார்டன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தான் எங்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் தான் எங்களை வெற்றியும் பெற வைத்தார்கள். ஒவ்வொரு பந்திற்கும் உற்சாகம் ,ஊக்கம் கொடுத்து எங்களை நன்றாக ஆட வைத்தார்கள். அந்த உணர்வை தற்போது கூட என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

- Advertisement -

Harbhajan 1

இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தோல்வியே உறுதியாகிய இந்த போட்டியில் டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.