Worldcup : உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்ற இதனை செய்தே ஆகவேண்டும் – டிராவிட்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

Rahul
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு ஒரு முக்கிய குறிப்பு ஒன்றை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அதன்படி டிராவிட் கூறியதாவது : இந்திய அணி தற்போது மிகுந்த பலத்துடன் உள்ளது. மேலும் பேட்டிங்குக்கு சரிசமமாக பவுலிங்கிலும் இந்திய அணி பிரமாதமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இங்கிலாந்து போன்ற ஹைஸ்கோரிங் மைதானங்களில் மற்ற அணிகள் அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

chahal

அப்படி ரன்களை குவிக்கும் அணிகளுக்கு எதிராக இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் கொடுக்கும் ரன்களும் எடுக்கும் விக்கெட்டுகளும் இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் ஆகவே பும்ரா ஷமி போன்றவர்கள் துவக்க ஓவர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும்போது சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி எதிரணி கட்டுப்படுத்தினால் இந்திய அணிக்கு வெற்றி உறுதி என்று டிராவிட் கூறினார்.

Advertisement