செக்கப் பண்ணி மேட்ச் விளையாடுனா கொரோனா பரவாதா ? என்ன முட்டாள் தனமா இருக்கு – கடும் எதிர்ப்பை தெரிவித்த டிராவிட்

Rahul
- Advertisement -

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனோ வைரஸ் காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடைபெற இருந்த பல கிரிக்கெட் தொடர்களும் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Practice

மேலும் சமீபத்தில் நடைபெற இருந்த அனைத்து கிரிக்கெட் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் நாடுகளை சேர்ந்த வீரர்கள் தனித்தனியே பயிற்சி எடுப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பாதுகாப்புடன் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாடும் புதிய நடைமுறை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டிக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்க படுவார்கள் அவ்வாறு இந்த நடைமுறையை மேற்கொண்ட பின் போட்டி நடைபெறும் என்று தெரிவித்திருந்தனர். மேலும் இந்த முறையைக் கொண்டு பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற இருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

WI-vsPAK

இந்நிலையில் இந்த நடைமுறைக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தனது கடும் அதிர்ப்த்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த கருத்திற்கு முரண்பட்ட கருத்து தெரிவித்துள்ள டிராவிட் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடைமுறை சாத்தியப்படாது என்றும் நேரடியாக தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு தொடரில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க வேண்டும். அவ்வாறு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விளையாடும் ஒரு வீரருக்கு இரண்டாவது நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள் ? என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் காலி மைதானத்தில் விளையாடும் போது ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகமின்றி விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக அந்த போட்டியை ரசிக்க வாய்ப்பு இல்லை என்றும் மேலும் வெறுமனவே போட்டியை விளையாட அவர்களுக்கு உத்வேகம் இருக்காது என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். டிராவிட்டின் இந்த கருத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது. மேலும் டிராவிட் கூறிய அனைத்தும் சரியான வார்த்தைகள் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement