INDIA : இவர்கள் மூவரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடினால் மட்டுமே கப் நமக்கு கிடைக்கும்- டிராவிட்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Dravid
Dravid
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

kohli

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் இரண்டு நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்திய அணி இந்த உலக கோப்பை தொடரின் ஜெயிக்க முக்கிய குறிப்பு ஒன்றினை டிராவிட் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து கவலை தேவையில்லை. அந்த அளவிற்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. அதேபோன்று பவுலிங்கிலும் இந்திய அணி இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

ஆனால் இங்கிலாந்து ஆடுகளங்களில் அதிக ரன்கள் அடிக்கும் வகையில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகையால் அனைத்து அணிகளும் அதிக ரன் குவிக்கும் அதனால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ச்சியாக வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முடியும். எனவே இந்த முறை இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணியின் பந்துவீச்சு ஒரு முக்கிய சக்தியாக விளங்கும் என்று டிராவிட் கூறினார்

Advertisement