இவரை மட்டும் சீண்டாதீங்க. தாங்கமாட்டீங்க. ஆஸி வீரர்களை எச்சரித்த டிராவிட் – விவரம் இதோ

Dravid
Dravid
- Advertisement -

வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. சென்ற முறை இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின்கேப்டன் விராட் கோலியை பற்றி இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

indvsaus

- Advertisement -

இது குறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பேசியதாவது… இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நாம் சீண்டுவது நமக்கு நல்லதல்ல. அவரை எந்த அளவிற்கு சீண்டுறோமோ அந்த அளவிற்கு நம்மை திருப்பி அடிப்பார். ஆக்ரோஷமான வீரர் அவர்.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டும் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை சீண்டி வாங்கிக் கொண்டதை நாம் பார்த்திருப்போம் என்று கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய ராகுல் டிராவிட்…

Kohli-1

விராட் கோலி நீங்கள் நினைப்பது போல் கிடையாது. அவர் எப்போதும் ஆக்ரோஷமாக ஆடுவதையே விரும்புவார். அவர் வளர்ந்தது அப்படித்தான் அவருக்கு ஆக்ரோசஷம் மிகவும் பிடிக்கும். தன்னை சீண்டிய அவர்களுக்கு பதிலடி கொடுப்பதில் வல்லவர் நீங்கள் அமைதியாக இருந்தாலும் அதனை விராட் கோலி ஆக்ரோஷமாக தான் இருப்பார் அவரை சீண்டினாலும் ஆக்ரோஷமாக தான் இருப்பார்.

- Advertisement -

அவரை சமாளிப்பது உங்களுக்கு சற்று பெரிய காரியமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். முன்னதாக மிட்சல் ஜான்சன், ககிசோ ரபடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வீரர்கள் விராட் கோலியை சீண்டி தங்கள் நாட்டிலேயே வாங்கிக் கொண்டதை நாம் பார்த்திருப்போம். பொறுத்திருந்து பார்ப்போம் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி எப்படி தன்னை முன்னிறுத்துகிறார் என்று.

Kohli

கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தனர். அந்த தோல்விக்கு பழிதீர்க்க ஆஸ்திரேலிய அணி காத்திருக்கிறது. எனவே வரும் இந்திய ஆஸ்திரேலிய தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உண்மையே.

Advertisement