இவர் இருந்தா டீம் ஜெயிக்கும்ன்ற நம்பிக்கை இருந்தாலும் அணியில் அவரை சேர்க்காத டிராவிட் – நல்ல முடிவுதான்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அண்மையில் முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி இலங்கை அணியை 2 க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி 1 க்கு 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரின் முதல் போட்டிக்கான அணியில் அறிமுக வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் தமிழக சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். இந்த அணியில் அனுபவ வீரர்களான மணிஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் அவர் ஒருநாள் தொடரில் விளையாடிய மோசமான பார்ம் காரணமாக தற்போது டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏற்கனவே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இருந்தாலும் சஞ்சு சாம்சன் அணியில் சேர்த்து சரியான முடிவை எடுத்துள்ளார் பயிற்சியாளர் டிராவிட்.

Samson

நேற்றைய போட்டியில் முதல் விக்கெட் விழுந்ததும் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் குவித்தார். மனிஷ் பாண்டே டி20 அணிக்காக இந்திய அணியில் விளையாடும் போது இதுவரை 20க்கும் மேற்பட்ட போட்டிகளில் அவர் விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் இந்திய அணி மட்டுமே ஜெயித்துள்ளது. இதன் காரணமாக அவர் இருந்தால் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஆவது அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pandey

இந்நிலையில் அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு டிராவிட் வாய்ப்பளித்தார் அவரது இந்த கணிப்பு நேற்றைய போட்டியில் சரியாக அமைந்தது. ஏற்கனவே பல ஆண்டுகளாக அணியில் விளையாடி வரும் மனிஷ் பாண்டே தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்றாலும் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement