ப்ளீஸ் எனக்கு கோச் பதவி வேணாம் புரிஞ்சிக்கோங்க. பயிற்சியாளர் பதவியை துறந்த டிராவிட் – காரணம் இதுதான்

dravid
- Advertisement -

2015-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு வருடம் பயிற்சியாளர் இல்லாமலேயே இந்திய அணி விளையாடியதும் குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு அணில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

Dravid

- Advertisement -

ஆனால் அவருக்கும் விராட் கோலிக்கும் சுத்தமாக ஒத்துவரவில்லை. இதன் காரணமாக கேப்டனாக இருந்த விராட் கோலி தனது தொடர்புகளை பயன்படுத்தி அணில் கும்பிலேவை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார். அதன் பின்னர் யார் பயிற்சியாளராக வருவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் இருந்துகொண்டே இருந்தது.

அப்போது ராகுல் ட்ராவிட், ரவிசாஸ்திரி, சஞ்சய் பங்கர் ஆகியோர் இதற்கான போட்டியில் இருந்தனர். ராகுல் டிராவிட் தான் இந்தியாவின் பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ரவிசாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அப்போது ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்த முன்னாள் பிசிசிஐ செயலர் வினோத் தற்போது இது குறித்து பேசியுள்ளார்..

Dravid

ராகுல் டிராவிட் எங்களிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், பயிற்சியாளராக செயல்பட்டால் குடும்பத்தினருடனும் மகன்களிடம் நேரம் அதிகமாக செலவிட முடியாது என்றும் தெரிவித்தார். குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று ஆசையாய் கூறினார். இவ்வாறு வெளிப்படையாக இருந்தார் டிராவிட்.

dravid

அவரின் பக்கம் நின்று யோசித்து பார்த்தபோது அவரது கருத்தில் நியாயம் இருந்தது. அவர் மனதில் இருப்பதை கூறிவிட்டார். அவரது முடிவையும் நாங்கள் மதிக்கிறோம். இதன் காரணமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவித்தார். இல்லையென்றால் இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் தான் இருந்திருப்பார். அவருக்கு பதிலாக தான் ரவிசாஸ்திரி நாங்கள் தேர்வு செய்தோம் என்று தெரிவித்துள்ளார் வினோத் ராய்.

Advertisement