இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பிளேயிங் லெவன் இதுதான் – ராகுல் டிராவிட் தேர்வு

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. ஜூலை 18ஆம் தேதி நாளை மறுதினம் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இலங்கையை சந்திக்கிறது. இந்த தொடரில் புதிதாக பங்கேற்றுள்ள வீரர்கள் மட்டுமின்றி புதிய கேப்டனாக தவான் மற்றும் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஆகியோர் இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

dravid

- Advertisement -

சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணியில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால் இலங்கை அணியும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் எளிதில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்தும் என்றாலும் இந்திய அணியின் இளம் வீரர்களின் ஆட்டம் இந்த தொடரில் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், பிரபலங்கள் ஆகிய பலரும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் இவ்வேளையில் டிராவிட் இந்த தொடருக்கான ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவனை தயார் செய்து உள்ளதாக தற்போது தெரிகிறது. அதன்படி துவக்க வீரர்களாக கேப்டன் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் களம் இறங்குவார்கள் என்றும் மூன்றாவது இடத்தில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் 4வது இடத்தில் அனுபவ வீரர் மணீஷ் பாண்டே ஆகியோர் களம் இறங்குவதாக தெரிகிறது.

Pandey

அதேபோன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்டிக் பண்டியா, க்ருனால் பாண்டியா ஆகிய இருவரும் களம் இறங்குவார்கள். பந்துவீச்சாளர்களை பொருத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் சைனி ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என்றது கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Chahal

டிராவிட் கணித்துள்ள பிளேயிங் லெவன் இதோ :

1) தவான், 2) ப்ரித்வி ஷா, 3) சூரியகுமார் யாதவ், 4) மனிஷ் பாண்டே, 5) சஞ்சு சாம்சன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) நவ்தீப் சைனி, 10) சாஹல், 11) குல்தீப் யாதவ்

Advertisement