என்னை எதுக்கு எல்லாரும் பாராட்டுறீங்க. உண்மையான பாராட்டு இவங்களுக்கு தான் கிடைக்கனும் – டிராவிட் பேட்டி

Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.

thakur 2

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ரஹானே இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். இதில் இளம் வீரர்களான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தங்கராசு நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில், ராகுல் டிராவிட் 19 வயதிற்குட்பட்ட இந்திய ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து இளம் வீரர்களை சிறப்பாக பயிற்சி செய்திருக்கிறார். அதனால் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக இளம் வீரர்கள் விளையாட ராகுல் டிராவிடின் பயிற்சிதான் காரணம் என்று அனைவரும் பாராட்டி வந்தனர்.

siraj

இந்நிலையில் ராகுல் டிராவிட் இதுபோன்ற தேவையற்ற பாராட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதற்கு எனக்கு தேவையற்ற பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பாராட்டுக்கள் அனைத்துக்கும் இந்திய இளம் வீரர்கள் தான் காரணம். நான் தேவையற்ற பாராட்டுகளை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

sundar 3

ராகுல் டிராவிட்டின் இந்த குணத்தினை அனைவரும் தற்போது பாராட்டி வருகின்றனர். மேலும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அகாடமியில் தான் இந்திய வீரர்களுக்கு ஏற்படும் காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்திய வீரர்களின் பிட்னஸ் டெஸ்ட் மற்றும் உடற்தகுதி ஆகியவையும் இங்குதான் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement