தோனியின் பேட்டிங்கில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – டிராவிட் புகழாரம்

Dravid
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கிட்டத்தட்ட இந்திய அணியில் விளையாடி ஒரு வருடம் ஆன நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போய் உள்ளதால் அவரது வருகை தாமதம் ஆகி உள்ளது.

Dhoni

- Advertisement -

ஏற்கனவே அவர் பி.சி.சி.ஐ யின் ஒப்பந்த வீரர்கள் சம்பளப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று பல முன்னாள் வீரர்களும் கூறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மேலும் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்றும் பலர் கட்டாயப் படுத்தி வருகின்றனர்.

ஆனால் தோனி தனது ஓய்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை மேலும் தோனி குறித்து தினசரி ஒரு செய்தியாவது வெளிவந்து அது இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடத்திய இணையதள நிகழ்ச்சி ஒன்றிற்கு தோனி குறித்து தனது கருத்தினை பேட்டியாக அளித்துள்ளார்.

Dhoni

அதில் அவர் கூறியதாவது : தோனியின் ஆட்டம் உண்மையில் போட்டி முடியும் நேரத்தில் தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முக்கியமான நேரத்தில் சரியாக ஆடுவார் ஆனால் போட்டியின் முடிவு குறித்து அவர் எப்போதும் பெரிதாக மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்.

- Advertisement -

போட்டி முடியும் வரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்பது மட்டுமே அவர் நினைப்பார் என்று டிராவிட் கூறினார். மேலும் தோனியை போன்ற மனநிலையை அனைவரும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் டிராவிட் தெரிவித்துள்ளார்.

dhoni with pant

தான் ஒருபோதும் அது போன்ற மனநிலையைக் கொண்டிருந்தது இல்லை எனவும் தோனி எப்படி அவ்வாறு இருந்தார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகவும் டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement