தற்போதைய கிரிக்கெட்டில் இந்த 2 பவுலர்களால் மட்டுமே என்னை திணறடிக்க முடியும் – டிராவிட் ஓபன் டாக்

Dravid
Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் எவர்கிரீன் பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட் 1996 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டு வடிவத்திலும் சேர்த்து மொத்தமாக 509 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24208 ரன்களை குவித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த ஆறாவது வீரராகவும் இவர் திகழ்கிறார்.

Dravid 1

இந்திய அணியின் “தடுப்புச் சுவர்” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டிராவிட் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையல்ல. மேலும் அவர் விளையாடிய காலத்தில் ஒரு இன்னிங்ஸ் கூட சுயநலமாக ஆடாத வீரர் என்ற ஒரு கண்ணோட்டமும் அவர் மீது உள்ளது. அந்த அளவிற்கு இந்திய அணியின் நலனையும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்திய அணிக்காக விளையாடியவர் ராகுல் டிராவிட்.

மிடில் ஆர்டரில் இறங்கும் இவர் சரியான டெக்னிக்கலில் விளையாடும் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் . இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்கள் சச்சின், கங்குலி போன்றவர்களுக்கு இவர் எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல. ஆனால் சச்சின், கங்குலி, தோனி ஆகியோர்கள் பெருமளவு வெளியில் பெருமையாக பேசப்பட்டதால் டிராவிடின் புகழ் வெளியேவரவில்லை என்றாலும் இன்றளவும் இளம்வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

Dravid

அனைத்து விதமான ஷாட்களையும் முறையாக விளையாடும் திறமை கொண்ட இவர் பெரிதாக எந்த ஒரு பந்துவீச்சாளரிடமும் திணறியது கிடையாது. தனது கிரிக்கெட் வாழ்வில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஆலன் டொனால்ட், பிரெட்லி மற்றும் அக்தர் என பல்வேறு தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் இவர் சிறப்பாக விளையாடி அவர்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

- Advertisement -

அந்த அளவிற்கு எந்த ஒரு பந்து வீச்சாளருக்கு எதிராகவும் அவர் திணறியது இல்லை. மாறாக பந்துவீச்சாளர்களை கஷ்டப்படுத்தும் வீரர் என்று கூறலாம். அப்படிப்பட்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட் தற்போதைய பவுலர்களில் தான் சந்திக்க கஷ்டப்படும் பந்துவீச்சாளர்கள் யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார். அதில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார்.

rabada3

டிராவிட் முதலாவதாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை தேர்வு செய்துள்ளார். இரண்டாவதாக இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ரபாடா ஒரு ஸ்பெஷலான பவுலர் அதனால் அவர் எனக்கு சவால் அளிப்பார் என்று நினைக்கிறேன்.

bhuvi

அதேபோல புவனேஸ்வர் குமார் என்னைத் திணறடிக்க கூடியவர்தான். ஏனெனில் புது பந்தில் மிகுந்த கட்டுப்பாடுடன் வீசக்கூடிய திறமை படைத்தவர். அவரது இன்ஸ்விங் அபாரமாக இருக்கும் எனவே நிச்சயம் அவரை புது பந்தில் நான் எதிர் கொள்ளும் போது கண்டிப்பாக நான் விளையாடுவதற்கு கஷ்டப்படுவேன் என்று டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.