நான் எதிர்கொண்டதில் இவரே கடினமான பவுலர். இவரிடம் இருந்து ஸ்டம்பை காப்பாற்றுவது கஷ்டம் – டிராவிட் ஓபன் டாக்

Dravid
Dravid
- Advertisement -

இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் அவரது கிரிக்கெட் வாழ்வில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், பிரெட் லீ, சமிந்தா வாஸ், முரளிதரன், மலிங்கா, டேல் ஸ்டெயின் மற்றும் மெக்ராத் என பல முன்னணி பந்துவீச்சாளர்கள் எதிர்த்து சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பல இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

Dravid 1

- Advertisement -

இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது அதில் தனி ஒரு நம்பிக்கை பிறக்கும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தனது தடத்தைப் பதித்து டிராவிட் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட்டுக்காக உழைத்து வரும் டிராவிட் இன்றளவும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியினை வழங்கி வருகிறார்.

மேலும் கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் பேட்ஸ்மேனாக திகழ்ந்த அவர் அனைத்து வகையான ஷாட்டுகளையும் விளையாடுவதில் வல்லவர். அதிலும் குறிப்பாக பேக்புட்டில் இவர் ஆடும் ஆப் சைடு ஷாட்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு ஸ்டைலாக ஆடும் திறமை கொண்ட ராகுல் டிராவிட் தற்போது அவர் சந்தித்ததிலேயே கடினமான பந்துவீச்சாளர் குறித்து கருத்து ஒன்றினை அளித்துள்ளார்.

Dravid

அதில் அவர் கூறியதாவது : நான் சந்தித்த சர்வதேச பாஸ்ட் பவுலர்கள் பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிளன் மெக்ராத் தான் நான் எதிர்கொண்டதில் மிகவும் கடினமான பவுலர். எனது கிரிக்கெட் கரியரில் நான் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறிப் போனேன். ஏனென்றால் அப்போது மெக்ராத் தனது பவுலிங் பார்மின் உச்சத்தில் இருந்தார்.

- Advertisement -

அவர் பந்து வீசும்போது ஆப் ஸ்டம்பை அவரிடம் இருந்து காப்பாற்ற நான் பாடுபடுவேன். அந்த அளவிற்கு ஆஃப் ஸ்டம்ப் லைனில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அவரிடம் சற்று ஏமாந்தாலும் பந்து எட்ஜ் ஆகி கேட்சிக்கு செல்லும் அந்தளவுக்கு துல்லியமான பந்தை சரியான வேகத்தில் வீசுவதில் அவர் வல்லவர். முதல் ஓவரோ அல்லது இரண்டாவது ஓவரோ, 25 ஆவது ஓவரோ எந்த ஓவர் வீசினாலும் அவரின் திறன் மாறாமல் அதே ஆக்ரோஷத்துடன் வீசும் பழக்கம் உடையவர் என்று அவரை புகழ்ந்து பேசினார் டிராவிட்.

Mcgrath

ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10889 ரன்களும், 1 டி20 போட்டியில் விளையாடி 31 ரன்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement