பிங்க் பால் டெஸ்டில் சதமடித்த முதல் இந்தியர் கோலி இல்லையாம் – 2011ஆம் ஆண்டே அடிச்சாச்சாம்

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Kohli-2

- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி தான் இந்திய அணிக்கு பிங்க் பால் முதல் டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. எனவே இந்த போட்டியில் நடைபெற்ற அனைத்துமே சாதனையாக அமைந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

இதன் மூலம் பிங்க் பால் கிரிக்கெட்டில் இந்தியா சார்பாக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். ஆனால் உண்மையில் இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் விராட் கோலி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் 2011 ஆம் ஆண்டு இங்கிலீஷ் கிரிக்கெட் கிளப்பில் விளையாட ராகுல் டிராவிட் எம்சிசி அணி சார்பாக கவுண்டி போட்டியில் விளையாட ஒப்பந்தமானார்.

dravid

அபுதாபியில் பிங்க் பாலில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் டிராவிட் இரண்டாவது இன்னிங்சில் 106 ரன்கள் குவித்தார். அதுவே இந்தியர் ஒருவர் பிங்க் பாலில் அடித்த முதல் சதம் ஆக பதிவாகி உள்ளது. ஆனால் அது சர்வதேச போட்டிகளில் அடிக்கப்படாத காரணத்தினால் கோலி அடித்த இந்த சதம் பிங்க் பால் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் அடித்த முதல் சத்தமாக இது பதிவாகியுள்ளது.

Advertisement