சச்சினுக்கு முன்னதாக ஹால் ஆப் பேம் – ல் டிராவிட் இடம்பிடிக்க காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Dravid

ஐசிசி மிக உயரிய விருதான “hall of fame” இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் 6 ஆவது வீரராக சச்சின் டெண்டுல்கர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்.

sachin 1

இதற்கு முன்பாக பிஷன் சிங் பேடி(2009), சுனில் கவாஸ்கர்(2009), கபில்தேவ்(2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் டிராவிட் (2018)ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். மேலும் தற்போது சச்சினுக்கு முன்பாக டிராவிட் இந்த விருதிற்கு ஏன் தேர்வானார் என்ற காரணம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

ஐ.சி.சி hall of fame என்ற அந்தஸ்தை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மென்கள் ஒருநாள் போட்டிகளில் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8,000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்து இருக்க வேண்டும். பந்துவீச்சாளராக இருந்தால் 200 விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும். மேலும் இந்தப் பட்டியலுக்கு தேர்வாக வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடித்திருக்கவேண்டும்.

Sachin

இந்த விதிமுறைகளின் படி சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே இதற்கு தகுதியானவர்கள் என்றாலும் திராவிட 2012ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார். சச்சின் 2013ம் ஆண்டு ஓய்வு ஓய்வு அறிவித்தார். எனவே சச்சினுக்கு முன்பு டிராவிட் இந்தப் பட்டியலில் ஒரு வருடத்திற்கு முன்பாக இடம் பிடித்தார். பின்னர் தற்போது சச்சினுக்கு இந்த கௌதம் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் மொத்தம் 87 வீரர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.