18 ஆவது ஓவரின் போது கையில் துண்டுசீட்டுடன் ஓடிவந்த டிராவிட் எதற்கு தெரியுமா ? – விவரம் இதோ

Dravid-2

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் அடித்தாலும் இறுதிவரை போராடி இலங்கை அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் இந்த போட்டியில் இலங்கை அணி வென்றாலும் இந்திய அணி கடைசி வரை போராடிய விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Varun

இந்நிலையில் இந்த போட்டியின்போது 18-வது ஓவரில் திடீரென இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையில் ஒரு பேப்பர் உடன் வந்து டக் அவுட்டில் இருந்த சந்தீப் வாரியரிடம் அந்த பேப்பரை கொடுத்து மைதானத்தின் உள்ளே அனுப்பினார். அப்படி ராகுல் டிராவிட் அந்த பேப்பரில் என்ன தெரிவிக்க நினைத்தார் என்பதே அனைவரது கேள்வியாக இருந்துவருகிறது.

- Advertisement -

அதன்படி பதினெட்டாவது ஓவரின் முடிவில் மழை வந்து போட்டி நிற்குமாயின் அப்போது இலங்கை அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் 3 ரன்கள் இலங்கை அணி பின்தங்கி உள்ளது என்ற கணக்கை தான் தகவலாக ராகுல் டிராவிட் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனை சந்தீப் வாரியர் ஷிகார் தவானிடம் கொண்டு சென்று கொடுத்தார்.

dravid 1

மேலும் ஒருவேளை போட்டி அந்த 18-வது ஓவரில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடராமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் போட்டி 20 ஓவர் வரை தொடரவே அந்த அணியின் முன்னணி வீரரான தனஞ்சய டி சில்வா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவானும் : நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இதன் காரணமாகவே இந்த போட்டியில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement