என் வாழ்நாளில் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்..! யார் அந்த வீரர்.? டிராவிட் அதிரடி.!

Dravid
Dravid

இந்திய அணியின் சுவர் என்று போற்றப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் ஒரு மறக்க முடியாத பேட்ஸ்மேன் என்றே கூறலாம். அதே போல டிராவிட் மற்றும் சச்சின் இருவரும் சேர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். சமீபத்தில் சச்சின் குறித்து டிராவிட் பேசியபோது ‘தனது வாழ்நாளில் சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Dravid_Sachin

சமீபத்தில் இ எஸ் பி என் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கிரிக் இன்போ கலந்துரையாடலில் பங்குபெற்றார். அப்போது ‘உங்கள் வாழ்நாளில் யார் சிறந்த பேட்ஸ்மேன்’ என்ற கேள்வி ட்ராவிட்டிடம் கேட்கப்ட்டட போது “நான் எனது வாழ்நாளில் சிறந்த பேட்ஸ்மேன் என்று சச்சினை தான் கூறுவேன். அவரை போன்று ஒரு சிறந்த கிளாசிக் பேட்ஸ்மேன் வேறு யாருமில்லை” என்று தெரிவித்துள்ள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரார்களான சச்சின் மற்றும் டிராவிட் இந்திய அணியின் ஒரு அசைக்க முடியாத கூட்டணியாக இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் பல்வேறு வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் குவித்த 331 ரன்கள் தான் இந்திய அணியில் ஒரு ஜோடி குவித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.

dravid

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தனது சிறப்பான வழி நடத்தலின் மூலம் இந்திய ஏ அணியை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளார். சமீபத்தில் இந்திய ஏ அணி இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.