இனி பி.சி.சி.ஐ எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீரர்களுக்கு சோதனை நடத்தப்படும் – என்.ஏ.டி.ஏ

crick-BCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான ப்ரித்வி ஷா சமீபத்தில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் மூன்று மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார்.

Shaw

- Advertisement -

பிசிசிஐ அறிக்கையில் ப்ரித்வி ஷா பயன்படுத்தி ஊக்கமருந்து சாதாரண இருமல் மருந்துகள் கூட இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி பிசிசிஐக்கு இந்தப் விடயத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தால் இனிமேல் தேசிய அணி வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதனால் வரை தேசிய வீரர்களுக்கு சோதனை நடத்துவத்தை தவிர்த்து வந்தது தேசிய ஊக்கமருந்து தடுப்பு குழு இனிமேல் தேசிய அணிக்கு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் இதுபோன்று நடத்திய சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் இனி பி.சி.சி.ஐ யும் விட்டு வைக்க போவதில்லை என்று அறிவித்தது தேசிய ஊக்க மருந்து குழு அறிக்கையில் தெரிவித்தது.

bcci

இந்திய அணியின் சர்வதேச வீரர்களுக்கும் இனி ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும் இதற்கு பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவிக்க முடியாது. இங்கு அனைவரும் சமம் என்ற விதியை பின்பற்றியாக வேண்டும் என்று தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement