புலி போன்ற கண்களுடன் சச்சின் பேட்டிங் செய்யும்போது அதை மட்டும் நாங்க செய்யவே மாட்டோம் – ஆஸி ஜாம்பவான் ஓப்பன்டாக்

sachin6
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வாசிம் அக்ரம் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஜாம்பவான் எதிர்கொண்ட பெருமைக்குரியவர். அறிமுகமாகி ஒரு சில வருடங்களிலேயே அணியின் முதுகெலும்பாக மாறிய அவர் 24 வருடங்கள் இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது சுமந்து ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சரித்திர நாயகனாக வரலாற்றில் தனது பெயரை ஆழமாக பொறித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரைக் கொம்பாக இருந்த இரட்டை சதம் உட்பட யாராலும் எட்ட முடியாத சாதனைகளை தனது திறமையாலும் உழைப்பாலும் எட்டிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள் போன்ற யாராலும் எளிதில் உடைக்க முடியாத பிரம்மாண்ட உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

Sachin 1

அவர் விளையாடிய காலகட்டங்களில் ஜிம்பாப்வே அணியில் கூட தரமான பந்துவீச்சாளர்கள் எதிரணியை தெறிக்க விடுபவர்களாக இருந்தனர். அப்படி அவர் எதிர்கொண்ட அளவுக்கு தற்போது அனைத்து அணிகளிலும் தரமான பவுலர்கள் இல்லை என்ற காரணத்தாலேயே இன்று மட்டுமல்ல காலம் கடந்தும் என்றுமே அவர் ஜாம்பவானாக நிற்பார். அதிலும் 90களில் சச்சின் அவுட்டானால் இந்தியா தோல்வியடைந்து விடும் என்ற எண்ணத்துடன் நிறுத்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இந்தியாவை சாய்ப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் முதலில் சச்சினை அவுட் செய்ய வேண்டும் என்பதையே எதிரணிகளின் லட்சியமாக இருக்கும்.

- Advertisement -

வம்புக்கு அடி:
அதன் காரணமாக சோயப் அக்தர் முதல் கிளென் மெக்ராத் வரை உலகின் அத்தனை பவுலர்களும் எப்படியாவது அவரை அவுட்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பவுன்சர் உட்பட அனைத்து ஆயுதங்களையும் உபயோகித்து ஆக்ரோஷத்துடன் பந்து வீசுவார்கள். அதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் ஸ்லெட்ஜிங் செய்து எப்படியாவது அவரை அவுட்டாக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அசராத சச்சின் டெண்டுல்கர் தனது திறமையால் பவுண்டரிகளை பறக்கவிட்டு பலமுறை தக்க பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக 2003 உலக கோப்பையில் வம்பிழுத்த சோயிப் அக்தரை அசால்ட்டாக பறக்கவிட்ட சிக்ஸரை ரசிகர்கள் மறக்க முடியாது.

sachin

அதனால் ஸ்லெட்ஜிங் செய்பவர்களுக்கு வாயால் பதிலடி கொடுக்காமல் பேட்டால் பதிலடி கொடுக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் போது நான் உட்பட அனைத்து ஆஸ்திரேலிய பவுலர்களும் வம்பிழுக்க மாட்டோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வது அவரை மேலும் கோபப்படுத்தி இரு மடங்கு சிறப்பாக செயல்பட வைக்கும் என்று பாராட்டும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருடைய ஆக்ரோஷத்தை அவருடைய கண்களில் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீசும் போது அவரது கண்களைப் பார்த்தால் அது ஆக்ரோஷமான புலியின் கண்களைப் போல் உங்களுக்கு தெரியும். அவர் எப்போதுமே போட்டியில் பின்வாங்காமல் பங்கேற்க வேண்டும் என்று விரும்புபவர். அதனால் களத்தில் சச்சின் டெண்டுல்கரிடம் எப்போதும் எதுவும் பேசக்கூடாது என்று எங்களுடைய ஆஸ்திரேலிய அணியில் நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியின் ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்வோம்”

Lee

“ஏனெனில் களத்தில் அவரை நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்தால் அவர் அவுட்டாகாமல் பேட்டிங் செய்து கொண்டே இருப்பார் என்பது உங்களுக்கு தெரியும். எனவே அவருக்கு எதிராக நாங்கள் பந்து வீசும் போது வாயை மூடிக்கொண்டு போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவோம்” என்று கூறினார். வரலாற்றில் அனைத்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைய முறை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே அபாரமாக செயல்பட்ட பெருமைக்குரியவர்.

குறிப்பாக 2008இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு சிபி ஒருநாள் தொடரில் 145+ கி.மீ வேகத்தில் பிரட் லீ வீசிய பந்துகளை அசால்டாக தம்முடைய ட்ரேட் மார்க் ஷாட்டான ஸ்ட்ரைட் ட்ரைவ் அடித்ததை யாருமே மறக்க முடியாது. அந்த வகையில் சச்சினுக்கு எதிராக திறமையை மட்டும் வெளிப்படுத்தி அவுட்டாக்க முயற்சித்தால் வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கும் பிரட் லீ எந்த காரணத்தையும் கொண்டு ஸ்லெட்ஜிங் செய்து அவரை அவுட் செய்யலாம் என்று நினைத்தால் அதற்கு தக்க பதிலடியை கொடுத்து விடுவார் என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

Advertisement