என்கிட்ட தோனி மாதிரி உடம்பு இல்ல ஆனா பவர் இருக்கு ! நானும் டி20 ப்ளேயர் தான் – ஆதங்கத்துடன் இந்திய சீனியர் வீரர்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் அனல் பறந்து வரும் நிலையில் மே 6-ஆம் தேதி நடைபெற்ற 51-ஆவது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் வலுவான குஜராத்தை கடைசி இடத்தில் திண்டாடும் மும்பை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் இஷான் கிசான் 45 (29) கேப்டன் ரோஹித் சர்மா 43 (28) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக 44* (21) ரன்கள் எடுத்து சூப்பர் பினிசிங் கொடுத்தார்.

Hardik Pandya Run Out

- Advertisement -

அதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்கள் ரித்திமான் சாஹா 55 (40) சுப்மன் கில் 52 (36) என அதிரடியான ரன்களைக் கொடுத்து 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதை வீணடிக்கும் வகையில் அடுத்து வந்த சாய் சுதர்சன் 14 (11) ரன்களில் அவுட்டாக கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 (14) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

சொதப்பிய குஜராத்:
இருப்பினும் கூட களத்தில் ராகுல் திவாடியா மற்றும் டேவிட் மில்லர் இருந்ததால் குஜராத் வெற்றி உறுதி என அனைவரும் நினைத்த வேளையில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது அற்புதமாக பந்துவீசிய டேனியல் சாம்ஸ் 1, 0, 1, 1, 0, 0 என 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மில்லரை வைத்துக்கொண்டே 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதனால் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை கோட்டை விட்ட போதிலும் பங்கேற்ற 10 போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்த மும்பை ஆறுதல் அடைந்தது.

Shubman Gill Wriddhiam Saha

உடம்பு இல்ல, பவர் இருக்கு:
இப்போட்டியில் குஜராத் தோற்ற போதிலும் கூட அந்த அணிக்கு அதிக பட்சமாக மூத்த இந்திய வீரர் ரித்திமான் சாஹா அதிரடியாக 6 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (40) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். தற்போது 37 வயதை கடந்துள்ள இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கே 1.9 கோடி என்று நல்ல தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- Advertisement -

இதுவரை கிடைத்த 6 வாய்ப்புகளில் அவர் 2 அரை சதங்கள் உட்பட 209 ரன்களை 130.63 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். கடந்த பல வருடங்களாக இந்தியாவிற்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இல்லாத காரணத்தாலும் 100 – 150 என்ற ஓரளவு ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மட்டும் ரன்கள் அடிக்க கூடியவராக இருப்பதாலும் டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற கருத்து பரவலாக உள்ளது.

Saha

அதற்கேற்றார் போல் 2010 முதல் பெரும்பாலும் அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்ததால் “டெஸ்ட் பேட்ஸ்மேன்” என அறியப்பட்ட அவர் அந்த வாய்ப்பையும் ரிஷப் பண்ட் வந்த காரணத்தால் இழந்து இந்திய அணியில் இருந்து தற்போது கழற்றி விடப்பட்டுள்ளார். ஆனால் நேற்றைய போட்டியை போல் முடிந்த அளவுக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தன்னாலும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் என அவ்வப்போது நிரூபித்து கொண்டே வருகிறார். இருப்பினும் கூட அனைவருமே தம்மை டெஸ்ட் பேட்ஸ்மேன் என முத்திரை குத்துவது வேதனை அளிப்பதாக சகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என சிலர் கூறுவதற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் எனது ஆரம்ப காலத்திலிருந்தே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாட எனக்கு எப்போதும் விருப்பமே. என்னிடம் எம்எஸ் தோனி, ஆண்ட்ரே ரசல், கிறிஸ் கெய்ல் போன்றவர்களின் உடம்பு இல்லை என்றாலும் பவர்பிளே ஓவர்களில் பயமின்றி அடிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையையும் பவரும் உள்ளது. இது யாருக்கும் பதிலளிக்கும் ஒரு கருத்து கிடையாது. எனது அணி பெரிய இலக்கைத் துரத்தும் போது என்னால் சிறந்த தொடக்கத்தை கொடுக்க முடியும். என்னுடைய ஆட்டம் அணிக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது” என கூறினார்.

Saha

இதுவரை 114 ஐபிஎல் இன்னிங்சில் 10 அரை சதங்கள் 1 சதம் உட்பட 2319 ரன்களை 128.90 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள சகா அனைவரும் தம்மால் டி20 போட்டிகளில் விளையாட முடியாது என கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் அடித்த அந்த ஒரு சதம் கடந்த 2014ல் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 115* (55) பஞ்சாப் அணிக்காக அடித்ததாகும். அதில் கொல்கத்தா வென்றாலும் கூட இறுதிப் போட்டியில் சதம் அடிக்கும் அளவுக்கு சஹாவும் ஒரு சிறப்பான டி20 பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement