யார் சொன்னாலும் உன் பேட்டிங் ஸ்டைலை மாற்றாதே.! இந்திய அணியின் இளம் வீரருக்கு சச்சின் அறிவுரை. !

sachin

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற நிலையில் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர் பிரிதிவி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தன் கருத்தினை கூறியுள்ளார்.

prithiv 2

பிரிதிவி ஷா நேர்த்தியான பேட்ஸ்மேன் அவருடைய பேட்டிங் இயற்கையாகவே அருமையாக உள்ளது. உங்களுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றி கொள்ள வேண்டாம் என்றும், மேலும் உங்களுடைய ஆட்டத்திறனை மேம்படுத்தி கொள்ளுங்கள். மற்றபடி எந்த மாற்றத்தினையும் செய்ய வேண்டாம் என்று சச்சின் கூறியுள்ளார்.
8வயதிலே சச்சின் பிரிதிவி ஷா அவர்களை பார்த்து பேட்டிங் நுணுக்கங்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரேனும் உன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ள சொன்னால் என்னிடம் சொல், நான் பேசிக்கொள்கிறேன் அவர்களிடம் என்று சச்சின் கூறியுள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த பிரிதிவி ஷா பள்ளிபோட்டியின் போது கூட சிறப்பாக விளையாடி சாதனை படைத்துள்ளார். அப்போதிலிருந்தே சச்சினின் கண் பார்வையில் அவர் இருந்து வருகிறார்.

Prithvi_Shaw

பிரிதிவி ஷா அண்டர் 19உலகக்கோப்பையை வென்றவர் மேலும் Ipl போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய அணியில் அடுத்த போட்டிக்கு விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் நிச்சயமாக அவர் அவருடைய திறமையை நிரூபிப்பார் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.