கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் முதல் தொப்பி ஏலம் போனது – எத்தனை கோடி தெரியுமா ?

Bradman
- Advertisement -

டான் பிராட்மேன், ஆஸ்திரேலிய அணியின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன் என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 1928-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். இவர் உலகளவில் ஒரு தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6966 ரன்களை குவித்துள்ளார். இதில் 29 சதங்கள் மற்றும் 13 அரை சதங்களை விளாசியுள்ளார். பிராட்மேன் டெஸ்ட் பேட்டிங் 99.9 சராசரியை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

bradman

- Advertisement -

1930 ஆம் ஆண்டு இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டான் பிராட்மேன் 974 ரன்களை விளாசியுள்ளார். அந்தத் தொடரில் அவரின் சராசரி 139.14, அதில் மூன்றாவதுப் போட்டியில் 334 ரன்கள் அடித்தார். இதுவே அவரது அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. இவர் தற்போது வரை உலக அளவில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் பல டெஸ்ட் வீரர்களுக்கு ரோல்மாடலாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் முதன்முதலாக அணிந்து விளையாடிய ஆஸ்திரேலிய தொப்பி தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது. பிராட்மேன் 1928-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட்டில் பயன்படுத்திய தொப்பி தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது.

bradman cap

1959இல் பிராட்மேன் அந்தத் தொப்பியை தனது நண்பரான பீட்டா் டன்ஹாம் என்பவருக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏலத்திற்கு வந்த இந்த தொப்பி 2.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலகிலேயே அதிக விற்பனையான இரண்டாவது நினைவுச்சின்னம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

bradman cap 1

இந்த தொப்பியை ஆஸ்திரேலிய தொழில் அதிபரான பீட்டா் ஃப்ரீடுமேன் ஏலத்தில் எடுத்துள்ளார். ஏலத்தில் எடுத்த பீட்டர் ஃப்ரீடுமேன் இந்தத் தொப்பியை காட்சிப்பொருளாக மாற்ற முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அணிந்திருந்த தொப்பி 5.6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலகிலேயே அதிக விற்பனையான முதல் நினைவுச்சின்னம் என்று பெருமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement