இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இன்று சென்னை மைதானத்தில் துவங்கியது. முதல் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர் பர்ன்ஸ் 33 ரன்களிலும், சிப்லி 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மேலும் 3 ஆவதாக களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் குவித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் ரூட் மேலும் நாளைய போட்டியில் இன்னும் அவர் அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டோம்னிக் சிப்லிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம். அந்த நிகழ்வு யாதெனில் இன்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய சிப்லி சிறப்பாக விளையாடி அருமையான பங்களிப்பை அளித்தார். துவக்க வீரர்களான பர்ன்ஸ் மற்றும் சிப்லி ஆகிய இருவரும் 50 ரன்களை கடந்து நல்ல அடித்தளத்தை அமைத்தனர்.

அதன்பிறகு 63 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இங்கிலாந்து அணி பறிகொடுத்தது. பர்ன்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க ரூட்டுடன் இணைந்த டாமினிக் சிப்லி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார் இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்து சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டது.

இருப்பினும் ஒரு நாள் முழுவதும் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே கடைசி வரை போராடிய சிப்லி 90-வது ஓவரின் 3-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் இன்று மட்டும் அந்த மூன்று பந்தினை தாக்குப்பிடித்து இருந்தால் நாளைய போட்டியில் சதமடிக்கும் அருமையான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அவரது துரதிர்ஷ்டத்தால் அந்த வாய்ப்பு போனது குறிப்பிடத்தக்கது.



