இந்திய வீரரான இவருக்கு எதிராக பந்துவீசுவது கஷ்டம். பவுலர்களை கண்டு அவருக்கு பயமே இல்லை – இங்கி பவுலர் பேட்டி

Eng-bess
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்பொழுது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து 321 ரன்கள் பின்தங்கி இருந்தது. அபாரமாக ஆடிய புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடித்திருந்தனர்.

pant 2

- Advertisement -

இதில் புஜாரா 73 ரன்களுக்கும், துரதிஸ்டவசமாக பண்ட் 91 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதில் ரிஷப் பண்ட் 88 பந்துகளுக்கு 91 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியைப் போலவே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதில் ஐந்து சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் இந்த பேட்டிங் திறமை குறித்து மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவருமான டாம் பெஸ் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர், “ரிஷப் பண்ட் முற்றிலுமாக மாறுபட்ட வீரர ஆவார். அவர் விளையாடும் விதத்தைப் பார்க்கையில் மற்றவர்களைவிட மிக தனித்துவமாக ஆடி வருகிறார். எந்த வகையிலும் எந்த ஒரு பவுலருக்கும் அவர் அச்சம் படுவதாக தெரியவில்லை. அவரது ஆட்டத்திலேயே தனது முழு கவனத்தை செலுத்தியதனால் அவரால் அதிக ரன்களை மிக எளிதாக குவிக்க முடிந்தது.

Pant

அவருக்கு எந்த விதத்திலும் பந்துவீசி யாராலும் அச்சுறுத்த முடியாது. அவராகவே முன்வந்து தவறு செய்தால் மட்டுமே அவரை அவுட் செய்ய முடியும்.அப்படிதான் ஒரு சிக்ஸர் அடிக்க முயற்சித்த போது நான் அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். இல்லையெனில் அவர் இன்னும் பல ரன்களை அடித்து இருந்திருப்பார்.

Pant

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
எனவும் டாம் பெஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement