நடராஜனை வாழ்த்தியதில் கூட இப்படி ஒரு பிழையா ? எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை – கலாய்க்கும் நெட்டிசன்கள்

Stalin

பல சிக்கல்களுக்கு இடையே சிறப்பாக நடைபெற்று முடிந்த தொடருக்கு பின்னர் துபாயிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்திய அணி சென்றடைந்து விட்டது. இந்த தொடருக்கான மூன்று வகையான இந்திய அணியும் ஏற்கனவே பி.சி.சி.ஐ யால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் புதிய வீரர்கள் சிலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

INDvsAUS

அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா பயணிப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த தொடரானது நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தொடராக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியும் தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இந்த ஐபிஎல் தொடரில் கலங்கிய தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான சக்கரவர்த்தி இடம் பிடித்திருந்தார்.

Nattu-2

ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இருந்த நடராஜன் தற்போது டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் தேர்வானதற்காக நடராஜனுக்கு தமிழக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவருக்கு ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் : இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! உடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்!

அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்! என்று தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்டாலின் தெரிவித்த இந்த வாழ்த்துச் செய்தியில் ஒரு பிழையை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி மேடையில் பொதுவாக வாய் தவறிப் பேசும் ஸ்டாலின் தற்போது ட்விட்டரிலும் ஒரு சிறிய தவறை செய்துள்ளார். அதன்படி நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் நடராஜ் உடன் பேசினேன். அவர் உயர்வுகளை பெறவும், வெற்றிகளை குவிக்கவும், அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று பதிவிடுவதற்கு பதிலாக விருப்பங்களை தெரிவித்தேன் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பிழையை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.