அவரது தந்தை மட்டும் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரு – சிராஜ் குறித்து பதிவினை வெளியிட்ட தமிழக வீரர்

Siraj 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வானவர் இளம்வீரர் சிராஜ். முதல் போட்டியில் அணியில் வாய்ப்பு கிடைக்காத இவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான காயம் அடைந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது அவர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை சிறப்பாக பவுலிங் செய்து வரும் முகமது சிராஜ் தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறார்.

siraj 2

அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் ஆஸ்திரேலிய அணியின் பலமான பேட்டிங் அசைத்து பார்த்துள்ளார். அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக பந்துவீசிய இவர் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் தேர்வான சில நாட்களிலேயே அவர் அப்பா ஹைதராபாத்தில் மரணமடைந்தார்.

இருப்பினும் அவர் அவரது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசைக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நான் விளையாடுவதுதான் என்றும் இந்திய அணிக்காக வெற்றியை பெற்று தந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவேன் என்றும் அவர் சபதம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அவர் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் சரிவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

siraj

சிராஜின் இந்த சிறப்பான பந்து வீச்சு காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் வீரரும், தமிழக நட்சத்திரமுமான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் சிராஜ் குறித்து தனது வாழ்த்துக்களை நெகிழ்ச்சியான கருத்துகளாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பு அபாரமான மன உறுதி இருந்தது. பின்பு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதே தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்பது அபாரமான சாதனை.

- Advertisement -

அதற்கு நான் தலை வணங்குகிறேன். இப்போது உங்களது தந்தை உங்களை நினைத்து பெருமை கொள்வார். மேலும் அவர் மேலிலிருந்து உன் சாதனையை பார்த்துக் கொண்டிருப்பார் என தினேஷ் கார்த்திக் பதிவிட்டு இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் தனது தந்தையை இழந்த சிராஜ் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று அதனையே தன் தந்தை மறைவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என்று சிராஜ் சபதம் ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.