தெ.ஆ அணிக்காக மீண்டும் ஆடுவேன். அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்கு – டிவில்லியர்ஸ் ஓபன் டாக்

ABD
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். அவரது ஓய்வு முடிவை ரசிகர்கள் ஏமாற்றத்துடன் ஏற்றுக்கொண்டனர். மேலும் அதற்காக பலரும் தங்களது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தனர்.

abd1

- Advertisement -

ஏனெனில் டிவில்லியர்ஸ் அப்போது மிகச்சிறந்த பார்மில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திடீர் திடீரென ஓய்வு அறிவிப்பை அளித்தது அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் அமைந்தது.

ஆனால் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஓய்வு அறிவித்ததாக டிவில்லியர்ஸ் அப்போது தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஐபிஎல் உட்பட பல்வேறு வெளிநாட்டு டி20 தொடர்களில் அவர் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் பலத்தை அதிகரிக்க மீண்டும் புதிய ரத்தத்தை பாய்ச்சும் விதமாக அணிக்கு டிகாக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ABD-1

அதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற டிவில்லியர்ஸ் அணியில் இருந்தால் மீண்டும் அணி பலப்படும் என்று பயிற்சியாளர் பவுச்சர் மற்றும் இயக்குனர் ஸ்மித் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தான் மீண்டும் அணியில் இணைய தயாராக இருப்பதாகவும் அது குறித்து நிர்வாகத்திடம் பேச போவதாகவும் டிவில்லியர்ஸ் கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.

- Advertisement -

அதன்பின்னர் டிவில்லியர்ஸ் வருகை குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் இல்லாத நிலையில் தற்போது அவரே தனது கம்பேக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு என்னுடைய முழு கவனமும் ஐபிஎல்லில் மட்டுமே இருக்கிறது. ஆர்.சி.பி அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

ABD

அதன் பின்னரே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று டிவில்லியர்ஸ் கூறி உள்ளார். ஐபிஎல் போட்டி நடப்பது சந்தேகம் ஆகியுள்ள நிலையில் முதன்முறையாக ஆர்சிபி டைட்டிலை வெல்லும் என்ற முனைப்பில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது டிவில்லியர்ஸ்ஸின் இந்த பேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement