RCB vs KXIP : கடைசி ஒரு ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஏபி மற்றும் ஸ்டோனிஸ் ஜோடி – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Stoinis
- Advertisement -

நேற்று இரவு பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி முதல் 19 ஓவர்களில் 175 ரன்களை முடித்திருந்தது. அடுத்து பெங்களூரு அணி சந்தித்த 20 ஆவது ஓவரில் முதல் பந்தில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸர் அடித்து சிங்கிள் கொடுக்க மறுபக்கம் ஸ்டோனிஸ் 6,4,6,4 என 20 ரன்கள் குவிக்க பெங்களூரு அணி 20 ஆவது ஓவரில் மொத்தம் 27 ரன்களை குவித்தது. இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை குவித்தது.

- Advertisement -

இந்த 27 ரன்களே பஞ்சாப் அணிக்கு சேசிங்கில் கடைசி ஓவரில் தேவைப்பட்டது. பஞ்சாப் அணி கடைசி ஓவருக்கு 27 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 ரன்களை மட்டுமே குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருவேளை இந்த 27 ரன்கள் பெங்களூரு அணி அடிக்கவில்லை என்றால் போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

- Advertisement -

Ashwin 1

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement