சரிந்திருந்த கோலியை காப்பாத்தி இவ்வளவு பெரிய ஆளாக்கியதே தோனிதான் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் கூறிய சம்பவம்

dhoni kohli

கிரிக்கட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிட முடியாது. எப்பேர்ப்பட்ட வீரர்களுக்கும் பார்ம் அவுட் என்பது வழக்கமான ஒன்றுதான். நிச்சயம் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வீரர்கள் பேட்டிங் செய்ய திணறி பார்ம் அவுட் ஆவார்கள். அப்படி அவர்கள் இருக்கும் சமயத்தில் இழந்த பார்ம்மை மீட்டெடுத்து நம்பர் ஒன் வீரராக வேண்டும். இல்லையெனில் அணியில் இருந்த விலக நேரிடும். இந்த இரண்டு ஆப்ஷன் தான் உள்ளது.

Kohli

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது கோலி தனது பார்மை இழந்தார். அந்த தொடரில் முழுக்க சொதப்பிய கோலி இனி எவ்வாறு மீண்டு எழக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அதை தோனி சிறப்பாகக் கையாண்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் எங்கள் அணியோடு இந்திய அணிக்கு ஒருநாள் தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் முதல் போட்டியில் கோலியை இரண்டு ரன்களோடு வெளியேற்றினோம். அடுத்த போட்டியில் கோலி 4-வது வீரராக களமிறங்கி 62 ரன்கள் குவித்தார்.

kohli 1

மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதற்கடுத்த நான்காவது போட்டியில் மீண்டும் மூன்றாவது இடத்தில் கோலியை நம்பிக்கை அளித்து மூன்றாவது இடத்தில் நம்பி இறக்கிவிட்டார் மேலும் அசவுகரியமான சூழலை மாற்றவும் கோலியின் திறனை மீட்டெடுக்க தோனி நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அதன் மூலம் எங்கள் அணிக்கு எதிராக அந்த போட்டியில் சதம் விளாசினார். அவரின் அந்த அசத்தலான சதத்திற்கு முக்கிய காரணம் தோனி அளித்த ஊக்கம் தான் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

dhoni

மேலும் ஆட்டத்தில் இருக்கும் அனைத்து வீரர்களிடம் இருந்தும் தனக்கு தேவையானதை கச்சிதமாக பெறுபவர் தோனி. அவர் ஒரு அற்புதமான மனிதர் தன்னை எப்போதுமே எளிமையானவராக வைத்துக்கொண்டு மற்றவர்களை மனதார பாராட்டக்குணம் படைத்தவர். அதையே அவர் விரும்புவார் என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு ராம்டின் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.