INDIA : நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 4 ஆவது இடத்தில் இவரே ஆடுவார்

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிற

india
- Advertisement -

இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டு வெற்றிகளுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது போட்டி இன்று 13ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

india

- Advertisement -

நியூசிலாந்து அணியும் இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதனால் இன்றைய இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பினை பெற்றுள்ளது. இருப்பினும் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற அச்சமும் உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் காயம் அடைந்த தவானுக்கு பதிலாக துவக்க வீரராக ராகுல் களமிறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் நான்காவது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. ஏனெனில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி உள்ளார். ஒருவேளை விஜய் ஷங்கர் அணியில் தேர்வு செய்தால் அவர் பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dinesh

ஆனால் அவர் வெகுசில போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக ஆடி உள்ளதால் அவரை விட தினேஷ் கார்த்திக் இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உலக கோப்பை தொடர் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement