டி20 உலகக்கோப்பையில் இவர் மட்டும் அணியில் இருந்தால் கப் நமக்குத்தான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

Karthik
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த டி20 தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது ? சிறப்பாக விளையாடப்போகும் வீரர்கள் யார் ? எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் ? எந்த அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும் ? என்று பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்தான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

Cup

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் மேற்கிந்திய வீரர் டேரன் சமி உடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் உலக கோப்பை தொடரில் பங்குபெறும் இந்திய அணி குறித்த பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் நிச்சயம் வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும். ஏனெனில் அவரிடம் தனித்துவமான ஒரு திறமை இருக்கிறது. நிச்சயம் அவர் ஒரு ஸ்பெஷலான வீரராக இந்திய அணிக்கு திகழ்வார். அப்படி ஒருவேளை வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டால் நிச்சயம் இந்த தொடரில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காண்பிப்பார். என்னை பொறுத்தவரை இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் அதில் முக்கிய காரணமாக வருன் சக்ரவர்த்தி இருப்பார்.

Varun

முக்கியமான போட்டிகளில் முடிவுகளை மாற்றக் கூடிய அளவிற்கு அவரிடம் திறன் உள்ளது. “குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்” என்று தினேஷ் கார்த்திக் உறுதிபட கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உலக கோப்பையை வெல்லப் போகும் அணி எது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோத நான் விரும்புகிறேன்.

Varun-1

ஏனெனில் இந்தியாவுக்கு அடுத்து என்னுடைய அடுத்த விருப்பமாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியே இருக்கிறது. எனவே இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement