டி20 உலகக்கோப்பை அணிக்கு தேர்வான பிறகு மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் வெளியிட்ட – முதல் பதிவு

Dinesh-Karthik-1
Advertisement

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தார். அந்த தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் நிச்சயம் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறி தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

Dinesh-Karthik

குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஃபினிஷராக செயல்பட்டு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சிறப்பாக பயன்படுத்திய அவர் அடுத்தடுத்த தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிச்சயம் இரண்டு டி20 உலக கோப்பையிலாவது விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்றி தர வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படையாக தெரிவித்திருந்த தினேஷ் கார்த்திக் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது அவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தான் டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வானது குறித்து தற்போது தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ள தினேஷ் கார்த்திக் “கனவு நனவாகிவிட்டது” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஹர்ஷல் பட்டேல் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி. கடுப்பாகி சுனில் கவாஸ்கர் அளித்த பதில்

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தினேஷ் கார்த்திக் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement