உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இங்கிலாந்தில் புதிய அவதாரம் எடுக்கப்போகும் தினேஷ் கார்த்திக் – விவரம் இதோ

Karthik
- Advertisement -

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. ஐசிசி நடத்திய இந்த தொடரின் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த போட்டியில் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

INDvsNZ

- Advertisement -

தற்போது மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இங்கிலாந்து சென்று மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை மேற்கொள்ளும் இந்திய அணி 18 ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது.

இதற்கான 25 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது தயாராக உள்ளது. இந்நிலையில் இந்திய அணியுடன் சேர்த்து இன்னும் சிலரும் இங்கிலாந்து பயணிக்க உள்ளனர். அவர்கள் யாரெனில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தான்.

gavaskar

ஏனெனில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே போட்டியை வர்ணனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் முன்னணி வர்ணனையாளர்கள் சிலர் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக்கும் கவாஸ்கரும் இந்த போட்டியை வர்ணனை செய்ய முடிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களும் இங்கிலாந்து பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல போட்டிகளில் வர்ணனை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவராக கவாஸ்கர் இருக்கும் வேளையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்றாலும் சில போட்டிகளில் அவர் வர்ணனையாளராக இருந்துள்ளார். எனவே அவரும் இந்த இறுதிப் போட்டிக்கு வர்ணனை செய்ய முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement