இந்திய வீரர்கள் யாருமே தூங்காம பயத்துல இருந்தாங்க – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்த வேளையில் கொரோனா அச்சம் காரணமாக இந்த ஐந்தாவது போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டது என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக தற்போது இந்த தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை உடன் இருக்கிறது.

indvseng

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அடுத்தடுத்து அணியின் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வீரர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த பிசியோதெரபிஸ்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் வீரர்கள் மத்தியிலும் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

ஆனாலும் இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் நிலைமையை மேலும் கடினம் ஆக்காமல் இந்திய வீரர்களை தனிமைப்படுத்தி இந்த போட்டியையும் நிர்வாகம் ரத்து செய்தது. இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை வீரர்கள் தூங்காமல் இருந்தார்கள் என்றும் போட்டி துவங்கும் அன்று காலை மூன்று மணிவரை கூட யாரும் தூங்கவில்லை என இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ind vs eng

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் தூங்கவே இல்லை. நான் பல வீரர்களிடம் பேசினேன். அவர்கள் போட்டிக்கு தயாராக இருக்க வேண்டுமா ? இல்லை என்ன நடக்கப்போகிறது ? என்று தெரியாமலேயே பதட்டத்தில் இருந்தனர். மேலும் மனரீதியாக அவர்களால் போட்டிக்கு தயார் படுத்திக்கொள்ள முடியவில்லை. போட்டியில் என்ன நடக்கும் என்பதை யோசித்து பெரும்பாலானோர் தூங்கவில்லை.

pujara

இருப்பினும் சரியான முடிவாக இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தமான விடயமாக இருந்தாலும் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்க இது ஒன்றுதான் சரியான முடிவு என்கிற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement